Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 63:28:43
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • பாதாள உலகிற்கான செயலியை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

    17/09/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து கட்டணம் 50 சதங்களாகவே தொடரவுள்ளது!

    17/09/2024 Duración: 02min

    குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பரீட்சார்த்த அடிப்படையில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 50 சதங்களாகக் குறைக்கப்பட்டிருந்த நிலையில் இத்திட்டம் நிரந்தரமாக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்திய மாணவர்களின் ஆஸ்திரேலிய கனவினைச் சிதைக்கும் விசா மோசடிகள்

    16/09/2024 Duración: 02min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    16/09/2024 Duración: 09min

    மேற்கு வாங்க மாநிலத்தில் தொடரும் மருத்துவர்கள் போராட்டம் - முதலமைச்சர் மம்தாவிற்கு நெருக்கடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசனுக்கும் இடையே நடைபெற்ற சர்ச்சை உரையாடல் மற்றும் தமிழகத்தில் அதிமுக - பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் கூட்டணி உருவாகுமா? போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொல்ல மற்றுமொரு முயற்சி!

    16/09/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/09/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • ஐ.நா மனித உரிமை பேரவை: இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் நீட்டிக்கப்படுமா?

    14/09/2024 Duración: 12min

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகியது.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    14/09/2024 Duración: 08min

    இந்த வார முக்கிய செய்திகள்: 14 செப்டம்பர் 2024 சனிக்கிழமை.

  • தனது Dulwich Hill வீட்டை விற்கும் பிரதமர் Anthony Albanese!

    13/09/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமர் Anthony Albanese, சிட்னி Dulwich Hillஇல் உள்ள தனது முதலீட்டுச் சொத்தை விற்பனைக்கு விட்டுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மாத்தளை சோமுவின் “ஒற்றைத்தோடு”

    13/09/2024 Duración: 11min

    ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய ஆளுமைகளில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஆளுமை மாத்தளை சோமு அவர்கள். அவரின் அடுத்த படைப்பிலக்கியமாக “ஒற்றைத்தோடு” எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது. தனது சிறுகதைத்தொகுப்பு குறித்தும், அடுத்துவரும் அவரின் இலக்கிய படைப்புகள் குறித்தும் எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    13/09/2024 Duración: 10min

    பொறுப்புக்கூறலுக்கு புதிய அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் - ஐ.நா மனித உரிமை பேரவை கோரிக்கை! தேர்தல் நாள் நெருங்குகிறது - அரசியல் மேடைகளில் பேசப்படும் விடயங்கள் எவை?

  • தங்கம் விலை ஏன் கூடுகிறது? தொடர்ந்து அதிகரிக்குமா?

    13/09/2024 Duración: 09min

    தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கான காரணம் தொடர்பிலும் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா என்பது தொடர்பிலும் பதிலளிக்கிறார் தமிழ் நாட்டின் பிரபல பொருளியல் நிபுணரும் Hindustan Chamber of Commerce நிறுவனத்தின் தலைவருமான வள்ளியப்பன் நாகப்பன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Indigenous astronomy: How the sky informs cultural practices - பூர்வீகக் குடிமக்களின் வியத்தகு வானியல் அறிவு

    13/09/2024 Duración: 09min

    Astronomical knowledge of celestial objects influences and informs the life and law of First Nations people. - பூர்வீக குடிமக்களின் வானியல் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த அறிவு அபாரமானது. இது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • முதியோர் பராமரிப்பு சீர்திருத்தங்கள்: வீட்டிலேயே தங்குவதற்கான ஆதரவு அதிகரிக்கிறது

    13/09/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/09/2024) செய்தி.

  • சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது - விரைவில் வரவுள்ள சட்டம்

    13/09/2024 Duración: 08min

    இந்த ஆண்டு இறுதிக்குள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நடைமுறைப்படும் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக Federal அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை கொண்டாடும் தமிழக கிராமம்! - ஒரு நேரடி ரிப்போர்ட்

    12/09/2024 Duración: 07min

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெற்றிபெறவேண்டும் என்று ஒரு தமிழக கிராமம் காத்திருக்கிறது. துளசேந்திரபுரம் என்ற கமலா ஹாரிசின் பூர்வீக கிராமத்திற்கு பயணம் செய்து விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • ஆஸ்திரேலிய பயணிகள் பிரிட்டன் செல்வதற்கு இனி பயண அனுமதி பெறவேண்டும்!

    12/09/2024 Duración: 02min

    பிரிட்டன் செல்லும் ஆஸ்திரேலிய பயணிகள் விரைவில் Electronic Travel Authorisation (ETA) எனப்படும் பயண அனுமதி பெறவேண்டுமென்ற நடைமுறை கொண்டுவரப்படுகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் குடியேற விரும்புபவர்களுக்கான வாய்ப்பு!

    12/09/2024 Duración: 02min

    விக்டோரியா தனது 2024-25 ஆம் ஆண்டுக்கான Skilled visa nomination திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Title: Does culture influence teaching/learning Mathematics? - கணிதம் கற்பதிலும் கற்பித்தலிலும் வேறுபாடுகள் இருக்கிறதா? புதிருக்கான விடை!

    12/09/2024 Duración: 21min

    The Learner's Perspective Study (LPS) pioneered by Dr David Clarke inspired a search on how mathematics is taught in the Indian Subcontinent and how students from the subcontinent in Australia learn mathematics. - கணிதம் கற்பிக்கும் முறை, கற்கும் முறை இவை இரண்டும் எப்படி கலாச்சாரத்தாக்கங்களுக்கு உள்ளாகின்றன என்பதை, ஆராய்ச்சியாளர், ஜெயந்தி சுப்ரமணியன் வாயிலாகவும், ஆஸ்திரேலிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சுபா, மாணவர்கள் சமந்தா, ஆர்த்திகன் வாயிலாகவும் அறியும் முயற்சி.

  • பணியிடங்களில் பலர் நெகிழ்வுத்தன்மையை விரும்புவதாக கூறுகிறது ஒரு அறிக்கை

    12/09/2024 Duración: 06min

    பணியிட நேரங்கள் மற்றும் எங்கிருந்து வேலை செய்வது போன்ற பணியிட ஏற்பாடுகளில் ஆஸ்திரேலியர்கள் நெகிழ்வுத்தன்மையை அதிகம் எதிர்பார்ப்பதாக ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Alex Anyfantis எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • நீங்கள் நலமா என்று விசாரிப்பது ஏன் முக்கியம் : R U OK

    12/09/2024 Duración: 12min

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை RUOK தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒருவரின் மனநல ஆரோக்கியம் RUOK - நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பது எவ்வாறு உறுதிசெய்கிறது மற்றும் இதன் அவசியம் என்ன? என பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் மனநல ஆலோசகராக பணியாற்றும் அன்புமொழி குப்புசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

página 18 de 25