Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
மெல்பன் ஆர்ப்பாட்டம் - காவல்துறையினர் கடுமையாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு
11/09/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 12/09/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.
-
கமலா ஹரிஸ், டிரம்ப் விவாதம்: 'குடிவரவாளர்கள் நாய் பூனைகளைப் பிடித்து உண்கிறார்கள்'
11/09/2024 Duración: 12minஅமெரிக்கத் தேர்தல் நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவேயுள்ள பின்னணியில், ஜனாதிபதி வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தங்களது முதல் விவாதத்தில் இன்று கலந்துகொண்டனர். தத்தமது கொள்கைகள் பற்றி இரு தலைவர்களுக்கிடையே நடைபெற்ற இக் கடுமையான விவாதம் பற்றி விவரிக்கிறார் அமெரிக்காவின் Maryland மாநிலத்திலுள்ள Salisbury பல்கலைக்கழக Conflict Analysis and Dispute Resolution துறையின் தலைவராகக் கடமையாற்றும் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
10 பேரை பலிகொண்ட NSW பேருந்து விபத்து- ஓட்டுநருக்கு 32 ஆண்டுகள் சிறை!
11/09/2024 Duración: 02minHunter Valley பேருந்து விபத்துடன் தொடர்புடைய ஓட்டுநர் Brett Buttonக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையின் அடுத்த அதிபர் யார்? திருவுளச்சீட்டா தீர்மானிக்கப்போகிறது??
11/09/2024 Duración: 11minஇலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள 'ஒருவன்' செய்திச் சேவையின் ஆசிரியர் நிக்சன் அமிர்தநாயகம் அவர்களோடு அலசுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தமிழக பேசுபொருள்: தமிழக அரசு பள்ளியில் மூடநம்பிக்கை உரை
11/09/2024 Duración: 07minதமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு எனும் பேச்சாளர் நிகழ்த்திய உரை மூட நம்பிக்கையை விதைக்கிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
Paraolympics: ஒலிம்பிக் போட்டிகளின் இன்னொரு முகம்
11/09/2024 Duración: 12minநடந்து முடிந்த Paraolympics குறித்த செய்தியின் பின்னணியை பிரான்ஸ் இலிருந்து முன்வைக்கிறார் ஊடகவியலாளர் S K ராஜன் அவர்கள்.
-
மேற்கு ஆஸ்திரேலிய அரசின் விருதுபெறும் தமிழ் ஆசிரியை!
11/09/2024 Duración: 11minமேற்கு ஆஸ்திரேலிய அரசின் மதிப்புமிகு Emerging Community Language Teacher of the Year Award எனும் பெருமைமிகு விருதை பெர்த் நகரில் வாழும் தமிழ் ஆசிரியை கார்த்திகா ரஞ்சித்குமார் அவர்கள் பெற்றுள்ளார். மேற்கு ஆஸ்திரேலிய மாநில அரசின் குடியுரிமை மற்றும் பல்லின கலாச்சார அமைச்சர் Dr Tony Buti அவர்களிடமிருந்து இந்த விருதை பெற்ற கார்த்திகா அவர்களுடனும், அவர் ஆசிரியராக பணியாற்றும் பெர்த்-Canning Vale அவ்வையார் தமிழ் பள்ளிக்கூட செயலாளர் ராஜவேலன் அவர்களையும் சந்திக்கிறோம். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
-
ஒன்பது மற்றும் பதினொரு வயதுடைய சிறார்கள் உயிரிழப்பு - தாய் கைது
10/09/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
SBS Examines : அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சமூக ஒற்றுமையை பாதிக்கிறதா?
10/09/2024 Duración: 04minவாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால் இன்று அது ஆஸ்திரேலியர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. மக்களிடையே நம்பிக்கை மற்றும் நேர்மறை உணர்வுகளை உருவாக்குவது தற்போது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
-
600 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக Amazon ஆஸ்திரேலியா அறிவிப்பு!
10/09/2024 Duración: 01minபண்டிகை காலத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான seasonal workers எனப்படுகின்ற குறிப்பிட்ட காலப்பகுதிக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அமேசான் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
NSW மாநில ஓட்டுநர்களைக் கண்காணிக்கவுள்ள Point-to-point கமராக்கள்!
10/09/2024 Duración: 02minநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் average speed கமராக்கள்/ Point-to-point speed கமராக்கள் ஊடாக அனைத்து ஓட்டுனர்களின் வேகமும் கண்காணிக்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
கன்பராவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் வாகனங்களுடன் சென்று போராட்டம்
09/09/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 10/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
Sydney debut: First Indian vocal and jazz fusion concert - சிட்னியில் தமிழ் கலந்து ஒரு வரலாற்று இசை நிகழ்வு!
09/09/2024 Duración: 13minSwapna Raghavan, founder of the Stage Foundation, is organising an event called Shakti Spirit to raise awareness about Type 1 Diabetes, using music and arts as tools. Australian jazz artist Dr. Sandy Evans and trailblazing artist Jess Green are collaborating with Indian classical vocalist Nadhamuni Gayatri Bharat and Ghatam artist Prahlad Iyer for the first time. While Swapna discusses the objectives behind the initiative, Gayatri explains the significance of this historic fusion performance. Produced by RaySel. - டைப் 1 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இசை மற்றும் கலைகளை கருவிகளாகப் பயன்படுத்தி Stage Foundation அமைப்பின் நிறுவனர் ஸ்வப்னா ராகவன் “Shakti Spirit” என்ற நிகழ்வை அரங்கேற்றுகிறார். ஆஸ்திரேலிய ஜாஸ் கலைஞர் Dr. Sandy Evans மற்றும் டிரெயில்பிளேசிங் கலைஞர் Jess Green ஆகியோர் முதன்முறையாக இந்திய பாரம்பரிய பாடகர் நாதமுனி காயத்ரி பாரத் மற்றும் கடம் கலைஞர் பிரஹலாத் ஐயர் ஆகியோருடன் இணைந்து இசை நிகழ்வை நடத்துகின்றனர். இந்த நிகழ்வு குறித்து ஸ்வப்னா அவர்களும் காயத்ரி அவர்களும் விளக்குகின்றனர். அவர்
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
09/09/2024 Duración: 09minவடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் கலவரம், ஜம்மு - காஷ்மீரில் ஒருபோதும் சட்டப்பிரிவு 370 திரும்பக் கொண்டுவரப்படாது என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சி நடத்தும் முதல் மாநாட்டிற்கு கடும் சிக்கல் மற்றும் அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மகா விஷ்ணு எனும் மேடைப் பேச்சாளா் கைது போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
பாதுகாப்பு படை வீரர்களின் தற்கொலைகள் மீதான ஆணைக்குழு அறிக்கை இன்று வெளியாகிறது
09/09/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/09/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்கும் பரிசோதனை!
09/09/2024 Duración: 11minகருப்பை கழுத்து புற்றுநோய் Cervical Cancer, வரும் முன் அறிந்துக்கொண்டால் அதனை முழுவதும் தடுக்க முடியும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை செய்யப்படும் Cervical Screening பரிசோதனை செய்துகொள்வதால் கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்க முடியும். இப்பரிசோதனை பற்றியும் இதனை செய்வதன் மூலம் எவ்வாறு கருப்பை கழுத்து புற்றுநோயை தடுக்க முடியும் என்பது பற்றியும் விரிவாக விளக்குகிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் மீரா மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
கிரின்ஸ் கட்சியின் NRPA ஆணையம் வாடகை வீடுகளில் உள்ளவர்களை பாதுகாக்குமா?
08/09/2024 Duración: 08minவாடகை வீடுகளில் வசிப்பவர்களின் உரிமைகளை பாதுகாக்க மற்றும் வாடகைச் சட்டத்தை பின்பற்றாத ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட National Renters Protection Authority தேசிய வாடகைதாரர்கள் பாதுகாப்பு ஆணையம் என்ற திட்டத்தை கிரீன்ஸ் கட்சி முன்வைத்துள்ளது. இது குறித்து பெர்த் நகரில் ரியல் எஸ்டேட் துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் Propertynet Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமான அரன் கந்தையா அவர்களின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இந்த வார முக்கிய செய்திகள்
06/09/2024 Duración: 04minஇந்த வார முக்கிய செய்திகள்: 7 செப்டம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
Why is dental health care expensive in Australia? - ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவம் தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
06/09/2024 Duración: 10minUnderstanding how dental care works in Australia can be crucial for maintaining your health and well-being. Learn how to access dental services, the costs involved, and some essential dental health tips to keep you and your family smile bright. - ஆஸ்திரேலியாவில் பல் பராமரிப்பு சேவை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேணுவதற்கு முக்கியமானது. இந்த விவரணத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல் பராமரிப்பு சேவைகளை எவ்வாறு அணுகுவது, அதற்கான செலவுகள் மற்றும் சில அத்தியாவசிய பல் சுகாதார குறிப்புகளைப் பார்ப்போம். ஆங்கில மூலம்: Maram Ismail. தமிழில்: றேனுகா துரைசிங்கம்
-
ஆஸ்திரேலிய பெற்றோர் விசாக்களுக்காகக் காத்திருக்கும் 151,000 பேர்!
06/09/2024 Duración: 02minஆஸ்திரேலியாவிற்கு தங்கள் பெற்றோரை அழைத்து வர விரும்பும் புலம்பெயர்ந்த குடும்பங்களால் தாக்கல்செய்யப்பட்ட 151,590 க்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக காத்திருக்கின்றன.தங்கள் பெற்றோரை நிரந்தர விசாவில் இங்கே அழைத்துவர விரும்பும் ஒவ்வொரு நபரும் அதைச் செய்ய முடியாத நிலை உள்ளதாக குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் Julian Hill, SBS பஞ்சாபியிடம் தெரிவித்தார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.