Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • He changed his name once, never his principles! - ஒருமுறை பெயரை மாற்றியவர், ஒருபோதும் தன் கொள்கையை மாற்றவில்லை!

    30/04/2024 Duración: 08min

    Tamil politician and former member of the Parliament of Sri Lanka, Eezhaventhan, passed away last Sunday at the age of 91. - தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஈழவேந்தன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலமானார். அவருக்கு வயது 91.

  • Key differences between IELTS and PTE - IELTS பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி?

    30/04/2024 Duración: 14min

    Dr Mahizhnan-a migration agent and IELTS Master Trainer- delves into the significance of IELTS and PTE tests for individuals migrating to Australia on skilled migration or student visas. He offers guidance on which exam may be better suited for specific groups, along with effective study techniques tailored to each test. Produced by Renuka Thuraisingham. - ஆஸ்திரேலியாவுக்கு வரும் skilled migrants மற்றும் சர்வதேச மாணவர்கள் உள்ளிட்டோர் தமது ஆங்கில மொழிப்புலமையை நிரூபிக்க வேண்டியுள்ள பின்னணியில், இதற்கான பரீட்சைகள் தொடர்பிலும் அவற்றில் சித்தியடைவதற்கான யுக்திகள் தொடர்பிலும் விளக்குகிறார், குடிவரவு முகவர் மற்றும் IELTS Master Trainer முனைவர் அண்ணாமலை மகிழ்நன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • "காலநிலை மாற்றத்தால் பூர்வீகக்குடி சமூகங்கள் காலநிலை அகதிகளாக மாறக்கூடும்"

    29/04/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 30/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • Poet Ambi's presence will endure, even in his physical absence - மறைந்தாலும் நம்மோடு எப்போதும் வாழ்ந்து வருவார் கவிஞர் அம்பி

    29/04/2024 Duración: 19min

    Yesterday, we bid farewell to Mr Ambikaibakar, affectionately known as Poet Ambi, who passed away at the age of 95. In this heartfelt tribute, Kulasegaram Sanchayan offers a reflection on the life and legacy of the esteemed poet. Joining us in honouring Poet Ambi are his long-time friend and colleague from the Radio and Ministry of Education (Sri Lanka), Ra Sathyanathan; and Mr. Thiru Thirunanthakumar, who remains dedicated to advancing Tamil education in Australia. - கவிஞர் அம்பி என அன்போடு அழைக்கப்படும் திரு அம்பிகைபாகர் அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவருடைய நீண்ட நாள் நண்பரும், வானொலி, கல்வியமைச்சு என்பவற்றில் இணைந்து பணியாற்றியவருமான, எமக்கு மிகவும் பரிச்சயமான இரா சத்தியநாதன் மற்றும் ஆஸ்திரேலியாவில் தமிழ் கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் தொடர்ந்து உழைத்து வரும் திரு திருநந்தகுமார் அவர்களின் கருத்துகளோடு, கவிஞர் அம்பி அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இந்தியாவில் கடந்த வாரம் இடம் பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி

    29/04/2024 Duración: 08min

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கட்சி மாட்டிறைச்சி உண்பதை அனுமதிப்பார்கள் என்று உபி முதல்வர் யோகி ஆதித்தயநாத்தின் சர்ச்சை பேச்சு, மணிப்பூர் வன்முறையின்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக அமெரிக்கா குற்றச்சாட்டு, இந்திய மற்றும் தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில் - வானிலை மையம் எச்சரிக்கை, தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என்று திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • Australian Bureau of Statistics decides not to utilise the 'Race' identity - ‘இனம்’ என்ற அடையாளத்தை கைவிட்டுள்ளது புள்ளியியல் துறை

    29/04/2024 Duración: 08min

    Recently, the Australian Bureau of Statistics announced its decision not to include data on ‘race’ in the upcoming 2026 census. It follows extensive research conducted by the bureau; they claim. Kulasegaram Sanchayan brings the story, with comments from Varuni Bala of the Australian Tamil Congress. . - ‘இனம்’ என்ற அடையாளம் குறித்து தாம் செய்த ஆய்வுகளின் முடிவில், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026ஆம் ஆண்டு நடத்தப்படும் போது இனம் குறித்த தரவைச் சேகரிப்பதில்லை என்று ஆஸ்திரேலிய புள்ளியியல் துறை, Australian Bureau of Statistics கடந்த வாரம் முடிவு செய்துள்ளது.

  • பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிக்க அரசு ஆவன செய்ய அழைப்பு

    29/04/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 29/04/2024) செய்தி.

  • யார் கவிஞர் அம்பி?

    28/04/2024 Duración: 09min

    அம்பி எனப்படும் அம்பிகைபாகன் அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 95. குழந்தை கவிஞன் என்றும் ஈழத்தின் தேசிய விநாயகம் என்றும் போற்றப்படுகின்றவர் கவிஞர் அம்பி என்ற இலக்கிய ஆளுமை பற்றிய குறிப்புகளை முன்வைக்கிறார் சிட்னியில் வாழும் எழுத்தாளர் யசோ அவர்கள். கவிஞர் அம்பி அவர்கள் தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடியபோது தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி.

  • Interview with Super Singer Title Winner Aruna and her sister Akila - சிட்னியில் சித்திரைத் திருவிழா - Super Singer Title Winner அருணாவுடன் அகிலா

    28/04/2024 Duración: 18min

    We spoke to Super Singer title winner Aruna and her sister Akila who are from Tamil Nadu will perform at the twelfth annual Chiththirai Festival in Sydney. Segment by Praba Maheswaran. - பன்னிரண்டாவது வருடமாக நடக்கவிருக்கும் சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ள Super Singer Title Winner அருணா அவரது சகோதரி அகிலா ஆகியோர் Super Singer கார்த்திக் அவர்களுடன் இணைந்து வருகைதந்து நிகழ்ச்சி வழங்கவுள்ளார்கள். இதுபற்றியும் தமது இசை வாழ்க்கை பற்றியும் அருணா, அகிலா சகோதரிகளுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • I'm waiting for an opportunity - Super Singer Karthik - சிட்னியில் சித்திரைத் திருவிழாவுக்கு வருகைதரும் Super Singer கார்த்திக்

    27/04/2024 Duración: 11min

    We spoke to Super Singer fame Karthik who is from Tamil Nadu will perform at the twelfth annual Chiththirai Festival in Sydney. Segment by Praba Maheswaran. - பன்னிரண்டாவது வருடமாக நடக்கவிருக்கும் சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ள Super Singer புகழ் கார்த்திக், Super Singer வெற்றியாளர் (title Winner) அருணா மற்றும் அவரது சகோதரி அகிலா ஆகியோர் இணைந்து வருகைதந்து நிகழ்ச்சி வழங்கவுள்ளார்கள். இதுபற்றியும் தமது இசை வாழ்க்கை பற்றியும் Super Singer கார்த்திக் அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    27/04/2024 Duración: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 27 ஏப்ரல் 2024 சனிக்கிழமை . வாசித்தவர்: றைசெல்

  • ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டில் பிறந்தவர்கள்

    26/04/2024 Duración: 02min

    ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு வீதமானவர்கள் வெளிநாடொன்றில் பிறந்தவர்கள் என புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • “Experience classical Tamil music in Sydney like never before!” - “இதுவரை கேட்டிராத வகையில் பாரம்பரிய தமிழ் இசையை சிட்னியில் வழங்குவோம்”

    26/04/2024 Duración: 18min

    Nadhaswara artist Jaishankar Kalimuthu and Thavil artist Mas Soundararajan from Tamil Nadu, India will grace the twelfth annual Chiththirai Festival in Sydney. - பன்னிரண்டாவது வருடமாக நடக்கவிருக்கும் சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ள நாதஸ்வர கலைஞர் ஜெய்சங்கர் காளிமுத்து, மற்றும் தவில் கலைஞர் மாஸ் சௌந்தரராஜன் ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள்.

  • Understanding the profound connections First Nations have with the land - பூர்வீகக்குடி மக்களுக்கும் இந்த நிலத்துக்கும் இடையிலான ஆழமான தொடர்பை புரிந்துகொள்ளுதல்

    26/04/2024 Duración: 07min

    The land holds a profound spiritual significance for Aboriginal and Torres Strait Islander peoples, intricately intertwined with their identity, belonging, and way of life. - பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களுக்கும் இந்த நிலத்துக்கும் இடையிலான ஆழ்ந்த பிணைப்பை வலியுறுத்தும் விவரணம் இது. ஆங்கில மூலம் Yumi Oba. தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    26/04/2024 Duración: 08min

    இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தின் மத்தியில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகை; ஊதிய உயர்வு கோரி மலையகப் பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 05 வருடங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் என்று முக்கிய செய்திகளின் தொகுப்பை “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • “குடும்ப வன்முறையைத் தவிர்க்க ஆண்கள் கற்றுக் கொள்ள அதிகம் இருக்கிறது" - அமைச்சர் Bill Shorten

    26/04/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 26/04/2024) செய்தி.

  • Meet the new pest-eating assassin - விவசாயிகளின் தோழி & தோழன்! பூச்சிகளின் கொலையாளி!

    25/04/2024 Duración: 08min

    Ladybirds - those tiny, spotted insects - are beloved of many, with some believing their bright colours and polka dot livery bring good luck. Now, pushing beyond the realm of luck and into the field of agriculture, the small beetle is taking on a new role as a pest-eating assassin, thanks to new research from Murdoch University. The story by Hannah Kwon for SBS News was produced by RaySel for SBS Tamil. - நாட்டில் பயிர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் முன்வைக்கும் யோசனை: பூச்சிகளை சாப்பிடும் கரும்புள்ளி செவ்வண்டுகளுக்கு பூச்சிகளை சாப்பிடும் பழக்கத்தை கற்றுத் தருவது என்பதாகும். இந்த அறிவியல் தகவலை விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Hannah Kwon. தமிழில்: றைசெல்.

  • வீரத்தை தமிழால் விதைத்தவன்!

    25/04/2024 Duración: 06min

    வார்த்தைகளை வாளாக வார்த்தவன்; மொழியைத் தேனாக வடித்தவன்; எதிரிகளைக் கவிதையால் அடித்தவன்; கம்பீரத்தால் காலங்கள் கடந்தவன். அவன் – பாரதிதாசன். “காலத்துளி” நிகழ்ச்சி வழி அவர் குறித்த தகவலை முன்வைக்கிறார் றைசெல்.

  • Are Consumers Falling for the Loyalty Program Trap? - நமக்கு தூண்டில் போடும் வியாபர தந்திரம்!?

    25/04/2024 Duración: 10min

    When consumers shop in a store, offering them a loyalty card or program is a common practice to encourage repeat visits. However, according to Deepa Karthik in Brisbane, there is a strategic business plan behind the discounts customers receive. Produced by RaySel. - நாம் கடையில் பொருட்கள் வாங்கும்போது நாம் தொடர்ந்து அந்த கடைக்கே செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் வாடிக்கையாளருக்கு லாயல்ட்டி அட்டை அல்லது Loyalty Program தரும் முறை பரவலாக காணப்படுகிறது. ஆனால் இதனால் நமக்கு கிடைக்கும் விலைச் சலுகைக்கு பின்னால் ஒரு பெரும் வர்த்தக தந்திரம் உள்ளது என்கிறார் பிரிஸ்பேன் நகரில் வாழும் தீபா கார்த்திக் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • Wealthy Sydney areas where deaths outnumber births - பிறப்புகளை விட இறப்புகள் அதிகரித்துள்ள சிட்னியின் பணக்காரர்களின் Suburbs

    25/04/2024 Duración: 06min

    The share of Sydney suburbs where deaths outnumber births has almost trebled in the past five years as the effects of population ageing reshapes neighbourhoods across the city. Praba Maheswaran presents the news explainer. - சிட்னி புறநகர்ப் பகுதிகளில் பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளன. இது சிட்னி சனத்தொகையின் வடிவமைப்பினை மாற்றியமைக்குமா? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

página 1 de 25