Informações:
Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
2024-க்கான உலகின் மிகச்சிறந்த விமான சேவைகள் எவை தெரியுமா?
25/06/2024 Duración: 02min2024ம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த விமான சேவைகள் எவை என்ற புதிய பட்டியலை விமானதரப்படுத்தல் நிறுவனமான Skytrax வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மெல்பன் வீடொன்றிலிருந்து நால்வர் சடலங்களாக மீட்பு!
25/06/2024 Duración: 02minமெல்பனின் வடக்கிலுள்ள வீடொன்றிலிருந்து நான்கு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான காரணம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
"ஆஸ்திரேலியாவில் வீட்டுவசதி அடிப்படை மனித உரிமையாக்கப்பட வேண்டும்"
25/06/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/06/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.
-
How to recycle electronic items and batteries in Australia - ஆஸ்திரேலியாவில் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வது எப்படி?
24/06/2024 Duración: 09minMany common household items such as mobile phones, TVs, computers, chargers, and other electronic devices, including their batteries, contain valuable materials that can be repurposed for new products. Electronic items we no longer use, or need are considered e-waste. Across Australia, there are government-backed programs available that facilitate the safe disposal and recycling of e-waste at no cost. - ஆஸ்திரேலியாவில் மின்னணு பொருட்கள் மற்றும் பேட்டரிகளை மறுசுழற்சி செய்வது எப்படி என்பது தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தமிழடியானாக வாழ்வதில் பெருமகிழ்வடைகிறேன் - கவி இளவரச அமிழ்தன்
24/06/2024 Duración: 13minதமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட இளவரச அமிழ்தன் அவர்கள், அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் என்ற அமைப்பை நிறுவி அதனூடாக தமிழ் அறிஞர்களை கௌரவிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள அவரை மெல்பன் கலையகத்தில் சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Understanding Osteoporosis: causes, prevention, and management - எலும்பு தேய்வு – Osteoporosis: எளிய விளக்கமும் தடுக்கும் முறைகளும்
24/06/2024 Duración: 09minOsteoporosis is becoming a common problem faced by many people. In this context, Dr. Nirmala Chrishanthan, a GP in Sydney, explains osteoporosis, offers ideas for preventing it, and outlines treatment methods we can implement if it occurs. Produced by RaySel. - எலும்பு தேய்வு – osteoporosis என்பது பலரும் எதிர்கொள்ளும் உபாதையாக மாறிக்கொண்டுள்ளது. இந்த நிலையில் osteoporosis குறித்த விளக்கத்தையும், osteoporos வராமல் தடுக்கும் யோசனைகளையும், வந்தால் நாம் மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகளையும் விளக்குகிறார் மருத்துவர் (GP) நிர்மலா கிருஷாந்த் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
24/06/2024 Duración: 09minஇந்தியாவில் அரசு தேர்வுகளில் முறைகேடு செய்தால் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி அபராதம் என்ற அதிரடி சட்டம் அமலுக்கு வந்துள்ளது மற்றும் தமிழகத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் 57 பேர் பலியான சம்பவம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
NSW, விக்டோரிய மாநிலங்களில் Taxi கட்டணம் உயர்கிறதா?
24/06/2024 Duración: 08minவாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் வேளையில், Taxi கட்டணங்களும் அதிகரிக்கப் பட இருக்கின்றன என்ற செய்தி NSW மற்றும் விக்டோரிய மாநிலங்களிலிருந்து வெளியாகியுள்ளன.
-
அடிலெய்ட் Westfield வணிக மையம் மூடுவதற்கு காரணமான இரண்டு பதின்மவயதினர் கைது
24/06/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 24/06/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.
-
இந்த வார முக்கிய செய்திகள்
22/06/2024 Duración: 04minஇந்த வார முக்கிய செய்திகள்: 22 ஜூன் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
நவுறுவில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை நூறாக அதிகரிப்பு!
21/06/2024 Duración: 02minநவுறு தடுப்புமையத்திலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இறந்துபோனதாக நாடகமாடி $718,000 காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பெர்த் பெண்
21/06/2024 Duración: 02minஆயுள் காப்பீட்டுத்தொகையைப் பெறுவதற்காக இறந்துபோனதாக நாடகமாடிய பெர்த் பெண் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக சனல் 9 செய்திவெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பணியிட மரணங்களுக்குக் காரணமானவர்களுக்கு, NSW கடுமையான சட்டங்கள்
21/06/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 21/06/2024) செய்தி.
-
Yoga: The art of harmonising physical and mental health - உடலுக்கும் மனதுக்கும் ஒரே நேரத்தில் நலம் சேர்க்கும் கலை!
20/06/2024 Duración: 13minToday, International Yoga Day (21st June) is celebrated all over the world. Kavitha Kuppusamy, an assistant professor of Yoga in Perth, shares the importance and insights of the art of yoga based on her experiences. - இன்று சர்வதேச யோகா தினம் (21 ஜூன்) உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உடலுக்கும் மனதுக்கும் ஒரே நேரத்தில் நலம் சேர்க்கும் கலை என்று பார்க்கப்படும் யோகா கலையின் முக்கியத்துவத்தையும், விளக்கத்தையும் தனது அனுபவங்களோடு பகிர்ந்துகொள்கிறார் பெர்த் நகரில் மனவளக்கலை எனும் யோகா கலையில் உதவி பேராசிரியராக இருக்கும் கவிதா குப்புசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
20/06/2024 Duración: 08minஇலங்கை பொருளாதார நெருக்கடியினால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவுமாவட்டத்தில்தமிழ்மக்களுடையபூர்வீகக்காணிகள்அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
பெர்த் குழந்தை சந்தீபன் மரணம் தொடர்பில் நீதிகோரும் பெற்றோர்
20/06/2024 Duración: 02minமேற்கு ஆஸ்திரேலியாவில் ரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்கள், தங்கள் மகனது மரணம் குறித்த விசாரணைகள் முடியும்வரை மகனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டுமென சனல் 7க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
யானைகள் பேசுகின்றன! நமக்கு புரிகிறதா?
20/06/2024 Duración: 09minயானைகளும் மனிதர்கள் போன்று சிக்கலான சமூக கட்டமைப்புகளில் வாழ்கின்றன. அப்படியான சமூக பிராணி போன்ற யானைகள் பிற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Sophie Bennett. தமிழில்: றைசெல்.
-
ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாறலாம், ஆனால் கடினம்: ஏன்? தீர்வு என்ன?
20/06/2024 Duración: 10minநாட்டில் இயங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களின் நலன் சார்ந்து செயல்படுவதில்லை என்ற விமர்சனம் எழும் பின்னணியில் தாம் வங்கிகள் தொடர்பான சில சீர்த்திருத்தங்களை முன்வைப்பதாக நாட்டின் கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers கடந்த வாரம் அறிவித்தார். இது குறித்த விளக்கத்தை NewGen Consulting Australasia எனும் நிறுவனத்தின் இயக்குனர் எமில் ராஜா அவர்களின் கருத்துக்களோடு முன்வைக்கிறோம்.
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் சாதியை மிக நுணுக்கமாக கடைபிடிக்கின்றனர் - "மல்லிகை" ஜீவா
20/06/2024 Duración: 08minஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவா அவர்களின் 97 ஆவது பிறந்த தினம் எதிர்வரும் வியாழன் (27 ஜூன் 1927) கொண்டாடப்படுகிறது. தமிழின் மாபெரும் இலக்கிய ஆளுமையான ஜீவா அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு (2006 ஆம் ஆண்டு) வழங்கிய நேர்முகத்தின் முக்கிய ஒலிக்கீற்றுகள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
June 23 is International Widows' Day! - ஜூன் 23 சர்வதேச விதவைகள் தினம்!
20/06/2024 Duración: 11minTo raise awareness about the challenges faced by women who have lost their husbands and are left without support, the UN General Assembly designated June 23 as International Widows' Day with a resolution passed at the end of 2010. - உலக முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அவர்களின் துயரைத் துடைக்கும் வகையிலும் ஜூன் 23 ஆம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக (International Widows' Day)அறிவித்து, 2010 ஆம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.