Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    01/04/2024 Duración: 08min

    உத்தரப்பிரதேசத்தை கதிகலங்க வைத்த முக்தார் அன்சாரி சிறையில் மர்மமான முறையில் மரணம், அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து 'இந்திய' கூட்டணி காட்சிகள் டெல்லியில் நடத்திய பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம், நாடாளுமன்ற தேர்தல் - பரபரக்கும் தமிழக அரசியல் களம் மற்றும் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • நாடுகடத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களை சிறையில் தள்ளும் திட்டம்: நியாயப்படுத்தும் அரசு

    01/04/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 01/04/2024) செய்தி. வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • "Robotax": The ATO’s clawback of old debt - 'RoboTax' : பழைய வரிக் கடன்களை கையில் எடுத்துள்ள ATO

    31/03/2024 Duración: 09min

    Australian Taxation Office is pursuing thousands of people over historical debts that it had previously put on hold. This feature explains more about this. - ஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO) பல வருடங்களுக்கு முன்னர் நிலுவையில் போட்ட அல்லது தள்ளுபடி செய்த தனிநபர் அல்லது சிறு வணிகங்களின் வரிக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    29/03/2024 Duración: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 30 மார்ச் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • இறைச்சி, முட்டை மற்றும் அலரிப் பூக்களுடன் ஆஸ்திரேலியா வந்த மாணவரின் விசா ரத்து

    29/03/2024 Duración: 02min

    2 கிலோவிற்கும் அதிகமான சமைத்த இறைச்சி, முட்டை மற்றும் அலரிப் பூக்களை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வர முயற்சித்ததற்காக சர்வதேச மாணவர் ஒருவரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 3,756 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையில் இந்த வாரம் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

    29/03/2024 Duración: 08min

    இலங்கையில் தமது நிலங்களை விடுவிக்ககோரி முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்கள் போராட்டம் மேற்கொண்டார்கள்; மலையகத்தின் பெருந்தோட்டங்களில் பணியாற்றும் மக்களின் ஊதிய பிரச்சினைக்கு தீர்வுக்காண்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Where did the Easter Bunny and Easter eggs come from? - ஈஸ்டர்-முயல்-முட்டை: என்ன தொடர்பு?

    29/03/2024 Duración: 07min

    Easter is the Christian celebration of the resurrection of Jesus, but the seasonal chocolate eggs and the bunny who delivers them are nowhere to be found in scripture. Renuka presents a feature on Easter eggs and Easter bunny. - ஈஸ்டர் பண்டிகை காலத்தில் ஈஸ்டர் egg மற்றும் ஈஸ்டர் bunny ஆகியவற்றின் விற்பனை களைகட்டிவிடுவதை நாம் அவதானித்திருப்போம். ஈஸ்டருக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு? ஈஸ்டர் காலத்தில் இவை ஏன் விற்கப்படுகின்றன என்பதுதொடர்பில் நேயர்கள் சிலரின் கருத்துக்களுடன் விவரணமொன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய ஒயின் தயாரிப்பாளர்களுக்கு எதிரான அனைத்து வர்த்தக வரிகளையும் சீனா கைவிட்டுள்ளது

    29/03/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 29/03/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • Labor's last-minute migration bill has been blocked - நிச்சயமற்ற நிலையில் தவிக்கும் அகதிகள் - அரசின் புதிய சட்டத்திற்கு முட்டுக்கட்டை

    28/03/2024 Duración: 10min

    There are about 9,000 asylum seekers who arrived in Australia over a decade ago and who remain caught in a Coalition-era system designed to 'fast-track' their claims. On the other side emergency laws to give the immigration minister stronger powers to deport detainees have been held up and sent to an inquiry. This feature which is produced by Selvi explains more - "Fast track " நடைமுறையில் சிக்கித் தவிக்கும் சுமார் 9,000 புகலிடக் கோரிக்கையாளர்களின் நிச்சயமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அழைப்புகள் வலுத்து வருகின்றன. அதேபோன்று ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • TM Krishna Receives the 'Sangita Kalanidhi' Award: Debating Controversy and Merit - TM கிருஷ்ணாவுக்கு “சங்கீதகலாநிதி” பட்டம் தரலாமா? தரக்கூடாதா?

    28/03/2024 Duración: 13min

    After the Chennai-based Music Academy named popular singer T.M. Krishna, known as TMK, to receive the Sangita Kalanidhi award, the highest honour in the world of Carnatic music, some members of the Carnatic classical fraternity criticized the vocalist. A group of musicians and singers protested the decision. This divide is also reflected in Australia. Ms. Gayatri Bharat, a Carnatic classical singer who opposes TMK receiving the award, and Mr. Partiban, a Carnatic music enthusiast who supports TMK, share their views. Produced by RaySel. - கர்நாடக இசையின் தலைமையகம் என்று கருதப்படும் சென்னை மியூசிக் அகாடமி பிரபல பாடகர் TM கிருஷ்ணாவுக்கு கர்நாடக இசை உலகின் மிக உயரிய விருதான “சங்கீத கலாநிதி” விருதை தரப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு சில கர்நாடக இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, விருதுவழங்கும் விழாவை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த சர்ச்சை ஆஸ்திரேலியாவிலும் பிரதிபலிக்கும் பின்னணியில் TMK விருது பெறுவதை எதிர்க்கும் கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி பரத் மற்றும் TMK யை ஆதரிக்கும் கர்நாடக இசை ஆர்வ

  • பப்புவா நியூகினியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

    28/03/2024 Duración: 02min

    பப்புவா நியூகினியில் வன்முறை மற்றும் அச்சம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படும் சூழலில், அங்குள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் - தங்கள் துன்பத்திற்கு முடிவு எட்டப்பட வேண்டுமெனக் கோரியுள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Understanding bankruptcy and its consequences in Australia - ஆஸ்திரேலியாவில் bankruptcy-ஐ தாக்கல் செய்வது எப்படி? அதன் விளைவுகள் என்ன?

    28/03/2024 Duración: 09min

    Bankruptcy can be complicated for many people, as it can bring about feelings of financial shame and stigma. However, it may be the only way to alleviate financial distress in some cases. If you struggle to manage your debts, filing for bankruptcy could be an option. - உங்களால் உங்கள் கடன்களை நிர்வகிக்க முடியவில்லை எனில், bankruptcy-ஐ தாக்கல் செய்வது குறித்து சிந்தித்துப்பார்க்கலாம். Bankruptcy-ஐ தாக்கல் செய்வது கடுமையான விளைவுகளையும் கொண்டு வரலாம் என்பதால் Bankruptcy Act-இன் கீழ் வரும் பிற தெரிவுகளைப் பார்ப்பது மிகவும் முக்கியமானது. இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஈஸ்டர் – கிறிஸ்து உயிர்த்த திருவிழா சிறப்புச் செய்தி

    28/03/2024 Duración: 06min

    கிறிஸ்து உயிர்த்த திருவிழா சிறப்புச் செய்தியை வழங்குபவர்: இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஒட்டர்தொட்டி நகரில் இயங்கும் அருட்சகோதரிகளின் இல்ல தலைமை நிர்வாகி அருட்சகோதரி.குழந்தை தெரசா அவர்கள்.

  • Why Only One Banana Variety Dominates the Australian Market Out of More Than 1,000? - உலகில் 1,000 வாழைப்பழ வகைகளிருக்க ஏன் ஆஸ்திரேலியாவில் ஒற்றைவகை மட்டுமே சந்தைக்கு வருகிறது?

    28/03/2024 Duración: 12min

    Worldwide, there are over 1,000 varieties of bananas, each with its own unique characteristics. However, in several countries, such as Australia, farmers predominantly cultivate a single type known as the Cavendish banana. The recent World Banana Forum, convened in Rome two weeks ago, highlighted growing concerns regarding this prevailing trend. Against this backdrop, Professor Asi Kandaraja provides insights into the world of bananas. Produced by RaySel. - உலகம் முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட வாழைப்பழ வகைகள் கிடைக்கின்றன. ஆனால் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் விவசாயிகள் Cavendish எனப்படும் ஒயொரு வகையான வாழையை பயிரிடுகின்றனர். இப்படியான போக்கு குறித்து இரு வாரங்களுக்கு முன்பு ரோம் நகரில் நடைபெற்ற World Banana Forum கவலை வெளியிட்டது. இந்த பின்னணி தகவலுடன் வாழைப்பழம் குறித்து பேராசிரியர் ஆசி கந்தராஜா அவர்கள் விளக்குகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • Accelerating Your Job Search: Factors That Speed Up Employment Opportunities - ஆஸ்திரேலியாவில் விரைவாகவும், நல்ல வேலை கிடைக்கவும் என்ன வழி?

    28/03/2024 Duración: 09min

    The factors that have contributed to many skilled migrants and international students in Australia securing their target jobs faster have been documented in new research. Some are earning well above the median salary just a few months after settling - landing jobs in sectors with skill shortages. The story by Biwa Kwan for SBS News was produced by RaySel for SBS Tamil. - ஆஸ்திரேலியாவில் வந்தவர்களுக்கு மிக விரைவாக வேலைகிடைக்கவும், அவர்கள் புதிய நண்பர்களை பெற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு என்ன தேவை? ஆய்வு முடிவு தகவல் அடிப்படையில் எழுதப்பட்ட விவரணம்.ஆங்கில மூலம் SBS-News க்காக Biwa Kwan. தமிழில்: றைசெல்

  • Story of our nation – Part10: Australia till 2015 - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம் 10: ஆஸ்திரேலியா 2015 வரை

    28/03/2024 Duración: 10min

    We are bringing the story of Australian political history in ten parts. In this concluding episode, we explore the Australian political landscape from seventies to now. - ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் இறுதிப் பாகத்தில், எழுபதுகளின் பிற்பாடுகளிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலிய வரலாறு எப்படி இருந்தது என்று நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

    28/03/2024 Duración: 02min

    ஈஸ்டர் விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சாக்லேட் வரலாறுகாணாத விலை உயர்வை சந்திக்கிறது!

    27/03/2024 Duración: 04min

    செய்திகள்: 28 மார்ச் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • How to dispose or recycle e-waste safely? - மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது அல்லது மறுசுழற்சி செய்வது எப்படி?

    27/03/2024 Duración: 11min

    Electronic waste (or e-waste) is any electronic equipment that is no longer useful as originally intended such as computers, mobile phones, televisions, fax machines, etc. How to dispose or recycle e-waste safely. Sujan Selvan who is the founder and CEO of Upcycled Tech explains more. - E-Waste மின்னணு கழிவுகள் வரும் காலங்களில் அதிகரிக்கவுள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக எவ்வாறு அப்புறப்படுத்துவது அதனை மீள்சுழற்சி செய்ய முடியுமா? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் சில வகையான மின்னணு கழிவுகளை மீள்சுழற்சி செய்து இலங்கைக்கு அனுப்பி வரும் Upcycled Tech செயற்திட்டத்தை நடத்தி வரும் சிட்னியில் வசிக்கும் சுஜன் செல்வன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • நாடுகடத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களை சிறையில் தள்ளும் புதிய சட்டத்திற்கு செனட் அவை முட்டுக்கட்டை

    27/03/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டமுன்வடிவு செனட் அவையின் ஆதரவைப்பெறத் தவறியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

página 7 de 25