Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • பப்புவா நியூகினியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

    28/03/2024 Duración: 02min

    பப்புவா நியூகினியில் வன்முறை மற்றும் அச்சம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படும் சூழலில், அங்குள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் - தங்கள் துன்பத்திற்கு முடிவு எட்டப்பட வேண்டுமெனக் கோரியுள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Understanding bankruptcy and its consequences in Australia - ஆஸ்திரேலியாவில் bankruptcy-ஐ தாக்கல் செய்வது எப்படி? அதன் விளைவுகள் என்ன?

    28/03/2024 Duración: 09min

    Bankruptcy can be complicated for many people, as it can bring about feelings of financial shame and stigma. However, it may be the only way to alleviate financial distress in some cases. If you struggle to manage your debts, filing for bankruptcy could be an option. - உங்களால் உங்கள் கடன்களை நிர்வகிக்க முடியவில்லை எனில், bankruptcy-ஐ தாக்கல் செய்வது குறித்து சிந்தித்துப்பார்க்கலாம். Bankruptcy-ஐ தாக்கல் செய்வது கடுமையான விளைவுகளையும் கொண்டு வரலாம் என்பதால் Bankruptcy Act-இன் கீழ் வரும் பிற தெரிவுகளைப் பார்ப்பது மிகவும் முக்கியமானது. இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஈஸ்டர் – கிறிஸ்து உயிர்த்த திருவிழா சிறப்புச் செய்தி

    28/03/2024 Duración: 06min

    கிறிஸ்து உயிர்த்த திருவிழா சிறப்புச் செய்தியை வழங்குபவர்: இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஒட்டர்தொட்டி நகரில் இயங்கும் அருட்சகோதரிகளின் இல்ல தலைமை நிர்வாகி அருட்சகோதரி.குழந்தை தெரசா அவர்கள்.

  • Why Only One Banana Variety Dominates the Australian Market Out of More Than 1,000? - உலகில் 1,000 வாழைப்பழ வகைகளிருக்க ஏன் ஆஸ்திரேலியாவில் ஒற்றைவகை மட்டுமே சந்தைக்கு வருகிறது?

    28/03/2024 Duración: 12min

    Worldwide, there are over 1,000 varieties of bananas, each with its own unique characteristics. However, in several countries, such as Australia, farmers predominantly cultivate a single type known as the Cavendish banana. The recent World Banana Forum, convened in Rome two weeks ago, highlighted growing concerns regarding this prevailing trend. Against this backdrop, Professor Asi Kandaraja provides insights into the world of bananas. Produced by RaySel. - உலகம் முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட வாழைப்பழ வகைகள் கிடைக்கின்றன. ஆனால் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் விவசாயிகள் Cavendish எனப்படும் ஒயொரு வகையான வாழையை பயிரிடுகின்றனர். இப்படியான போக்கு குறித்து இரு வாரங்களுக்கு முன்பு ரோம் நகரில் நடைபெற்ற World Banana Forum கவலை வெளியிட்டது. இந்த பின்னணி தகவலுடன் வாழைப்பழம் குறித்து பேராசிரியர் ஆசி கந்தராஜா அவர்கள் விளக்குகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • Accelerating Your Job Search: Factors That Speed Up Employment Opportunities - ஆஸ்திரேலியாவில் விரைவாகவும், நல்ல வேலை கிடைக்கவும் என்ன வழி?

    28/03/2024 Duración: 09min

    The factors that have contributed to many skilled migrants and international students in Australia securing their target jobs faster have been documented in new research. Some are earning well above the median salary just a few months after settling - landing jobs in sectors with skill shortages. The story by Biwa Kwan for SBS News was produced by RaySel for SBS Tamil. - ஆஸ்திரேலியாவில் வந்தவர்களுக்கு மிக விரைவாக வேலைகிடைக்கவும், அவர்கள் புதிய நண்பர்களை பெற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு என்ன தேவை? ஆய்வு முடிவு தகவல் அடிப்படையில் எழுதப்பட்ட விவரணம்.ஆங்கில மூலம் SBS-News க்காக Biwa Kwan. தமிழில்: றைசெல்

  • Story of our nation – Part10: Australia till 2015 - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம் 10: ஆஸ்திரேலியா 2015 வரை

    28/03/2024 Duración: 10min

    We are bringing the story of Australian political history in ten parts. In this concluding episode, we explore the Australian political landscape from seventies to now. - ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் இறுதிப் பாகத்தில், எழுபதுகளின் பிற்பாடுகளிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலிய வரலாறு எப்படி இருந்தது என்று நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

    28/03/2024 Duración: 02min

    ஈஸ்டர் விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சாக்லேட் வரலாறுகாணாத விலை உயர்வை சந்திக்கிறது!

    27/03/2024 Duración: 04min

    செய்திகள்: 28 மார்ச் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • How to dispose or recycle e-waste safely? - மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது அல்லது மறுசுழற்சி செய்வது எப்படி?

    27/03/2024 Duración: 11min

    Electronic waste (or e-waste) is any electronic equipment that is no longer useful as originally intended such as computers, mobile phones, televisions, fax machines, etc. How to dispose or recycle e-waste safely. Sujan Selvan who is the founder and CEO of Upcycled Tech explains more. - E-Waste மின்னணு கழிவுகள் வரும் காலங்களில் அதிகரிக்கவுள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. மின்னணு கழிவுகளை பாதுகாப்பாக எவ்வாறு அப்புறப்படுத்துவது அதனை மீள்சுழற்சி செய்ய முடியுமா? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் சில வகையான மின்னணு கழிவுகளை மீள்சுழற்சி செய்து இலங்கைக்கு அனுப்பி வரும் Upcycled Tech செயற்திட்டத்தை நடத்தி வரும் சிட்னியில் வசிக்கும் சுஜன் செல்வன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • நாடுகடத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களை சிறையில் தள்ளும் புதிய சட்டத்திற்கு செனட் அவை முட்டுக்கட்டை

    27/03/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டமுன்வடிவு செனட் அவையின் ஆதரவைப்பெறத் தவறியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 400,000 items seized from travellers at Australia’s international airports last year - தடைசெய்யப்பட்ட 4 லட்சம் பொருட்கள் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன

    27/03/2024 Duración: 11min

    Australia's international airports seized nearly 400,000 items from travelers last year, including live toads, slugs, birds’ nests, and holy water from the Ganges River. In light of this, Renuka presents a feature on what you can and can't bring into Australia. - தடைசெய்யப்பட்ட மற்றும் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான கிட்டத்தட்ட 4 லட்சம் பொருட்கள் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Passionate Pursuits: Music Creation, Songwriting, and Vocal Expression - இசையமைப்பது, பாடல் எழுதுவது, பாடுவது அனைத்துமே பிடிக்கும்

    27/03/2024 Duración: 12min

    Meet Kevin Miranda, a talented composer and vocalist who contributed two original songs to the recent Tamil film "Kuyko." With roots in both classical Indian music under Dr. Abhayambika Balamuralikrishna, and Western music, Kevin now resides in the US, where he continues to create music. In an Easter special program, RaySel interviews Kevin as he aims to further excel in his musical journey. - இளம் இசை அமைப்பாளர் கெவின் மிராண்டா அவர்கள். சமீபத்தில் வெளியான ‘குய்கோ’ எனும் தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களை இசையமைத்து பாடியவர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அவர், தொடர்ந்து இசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கலைமாமணி Dr.அபயாம்பிகா பாலமுரளிகிருஷ்ணாவிடம் சாஸ்த்திரீய சங்கீதம் கற்றுக் கொண்ட அவர் மேற்கத்திய இசையையும் கற்று தேர்ந்தவர். இசையில் மேலும் பல உச்சங்களைத் தொட முயற்சிக்கும் கெவின் அவர்களை ஈஸ்டர் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்திக்கிறோம். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • இந்திய தேர்தல் – கட்சிகள் சொல்வது என்ன? கள நிலவரம் என்ன?

    27/03/2024 Duración: 10min

    இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில், இந்திய தேர்தல் குறித்த கள நிலவரத்தை நாம் தொடர்ந்து முன்வைக்கவுள்ளோம். இந்திய தேர்தல் குறித்த சிறப்பு நிகழ்ச்சியின் முதற்பாகத்தை முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து தமிழ் பிரபாகரன் அவர்கள்.

  • இவர் என் அரசியல் நாற்காலியின் நான்காவது கால் – MGR

    27/03/2024 Duración: 06min

    தமிழ் திரை வானில் கருத்துச் சூரியனாக வலம் வந்தவர் கவிஞர் “பட்டுக்கோட்டை” கல்யாணசுந்தரம். பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் பாடல் மூலம் நேரடி வர்ணனையாக தந்தவர். என் அரசியல் நாற்காலியின் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று வர்ணித்தவர் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள். “பட்டுக்கோட்டை” கல்யாணசுந்தரம் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • ‘Fast track’ பரிசீலனை நிறைவடையாத அகதிகளுக்கு நிரந்திர வதிவிடம் வழங்குமாறு வலியுறுத்தல்

    27/03/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 27/03/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • நாடுகடத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களை சிறையில் தள்ளும் புதிய சட்டம் தயாராகிறது!

    26/03/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய தூதரகத்தின் சமூக ஊடகப் பதிவு: கோபமடைந்த ரஷ்யா

    26/03/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கும் இன்றைய (செவ்வாய்க்கிழமை 26/03/2024) செய்திகள்.

  • New English Language Requirements - IELTS தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மாற்றம்!

    26/03/2024 Duración: 11min

    The Australian Government has made changes to English Language Requirements for Student and Temporary Graduate visas. Mrs Shanthini Puvanenthirarajah explains the key aspects and implications of this changes. Mrs Puvanenthirarajah is an examiner and Tamil language consultant at NAATI, and she has also taught translation-related courses at RMIT University. Produced by Renuka Thuraisingham - ஆஸ்திரேலிய அரசு மார்ச் 23 முதல், மாணவர் மற்றும் Temporary Graduate விசாக்களுக்கான IELTS நிபந்தனைகளை மாற்றியுள்ளது. இதுபற்றிய தகவலையும் IELTSஇல் உங்கள் மதிப்பெண்ணை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் வழங்குகிறார் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான தேசிய அங்கீகார ஆணையத்தில்(NAATI) தேர்வாளராகவும் தமிழ்மொழி ஆலோசகராகவும் கடமையாற்றுபவரும், RMIT பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்பு தொடர்பிலான Diploma மற்றும் Advanced Diploma கற்கைநெறிகளுக்கான ஆசிரியராக பணியாற்றியவருமான திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Red Velvet cake Recipe - Red Velvet கேக் செய்முறை!

    26/03/2024 Duración: 10min

    Culinary professional Shantha Jeyaraj shares Red Velvet Cake Recipe. Produced by Renuka Thuraisingham. - பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் Red Velvet கேக் செய்முறையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய வானில் தோன்றும் ‘புழு நிலா’

    25/03/2024 Duración: 02min

    ஒளிரும் புழு நிலவு - worm moon இன்று திங்கள் இரவு வானத்தை ஒளிரச் செய்கிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

página 6 de 25